சாதனை பட்டியலில் டான் பிராட்மேனுடன் இணைந்த உஸ்மான் கவாஜா!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய உஸ்மான் கவாஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய உஸ்மான் கவாஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 29) காலேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 352 பந்துகளில் 232 ரன்கள் (16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!
புதிய சாதனை
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், ஆஸ்திரேலிய அணியின் லெஜண்டரி வீரரான டான் பிராட்மேனுடன் உஸ்மான் கவாஜா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
மிகவும் அதிக வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை உஸ்மான் கவாஜா (38 வயது) படைத்துள்ளார். அவருக்கு முன்பாக, மிகவும் அதிக வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை டான் பிராட்மேன் தன்வசம் வைத்துள்ளார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; இலங்கை தடுமாற்றம்!
இலங்கையில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் உஸ்மான் கவாஜாவையே சேரும். இதற்கு முன்பாக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர், கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 166 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.