விரல் எலும்பு முறிவு; 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஷான் மசூத் விலகல்!
காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் விலகியுள்ளார்.
காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் அணியில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய ஷான் மசூத், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேடன் சீல்ஸ் வீசிய பந்து கையில் பலமாக பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. மேலும், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 8-வது வீரராக களமிறங்கி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இடதுகை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஷான் மசூத் விலகியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்துக்கு ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத்துக்குப் பதிலாக அப்துல்லா ஷஃபீக், சௌத் ஷகீல் மற்றும் அவைஸ் ஸாஃபர் இவர்களில் ஒருவர் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து ஷான் மசூத் விலகியது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) டிரினிடாட்டில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Pakistan player Shan Masood has withdrawn from the second Test match against the West Indies due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.