3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆரம்ப முதலே தடுமாறினர். 36 ரன்களுக்கு அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் வந்த வீரர்களில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதமும்(102), அஸ்மத்துல்லா ஓமர்சாய்(50) அரைசதமும் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். அந்த அணியில் ஏழு பேர் ஒற்றை இலக்கங்களில் ரன் எடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
Advertisement
Advertisement
44.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 28. 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க பேட்டர் ஜெய்ஸ்வால் 110 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க பேட்டர் ரோஹித் சர்மா 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.
Yashavi Jaiswal scored 86-ball 110 runs to help India beat Afghanistan by nine-wickets to clean-sweep the series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.