பிக் பாஷ் தொடரில் விளையாட மறுத்த மிட்செல் சாண்ட்னர்; காரணம் என்ன?
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பிக் பாஷ் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பிக் பாஷ் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளார்.
வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மிட்செல் சாண்ட்னரை பிக் பாஷ் தொடரில் விளையாடும் அடிலைடு ஸ்டிரைக்கர்ஸ் அணி தொடர்பு கொண்டுள்ளனர். தங்களது அணிக்காக விளையாடுவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த வாய்ப்பை மிட்செல் சாண்ட்னர் மறுத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன் பின், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடர்களைக் காட்டிலும் பெரிய விஷயம் எதுவும் கிடையாது.
பிக் பாஷ் தொடரில் விளையாடுவதற்காக எனக்கு கிடைத்த ஒப்பந்தம் நன்றாக இருந்தது. ஆனால், நான் பொய் கூறப் போவதில்லை. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த நினைக்கிறேன் என்றார்.
New Zealand captain Mitchell Santner has turned down the opportunity to play in the Big Bash League.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.