FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹாரி புரூக் சதம்: 119 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து!

இங்கிலாந்து - இலங்கை மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி குறித்து...

16 செப்டம்பர் 2026, 3:31 pm IST
சதம் அடித்த மகிழ்ச்சியில் ஹாரி புரூக் - படம்: ஏபி
பகிர்:

இங்கிலாந்து - இலங்கை மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 254/4 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

இறுதியில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 33, தசுன் ஷனாகா 24 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து சார்பில் சோனி பேக்கர் 3, லியாம் டாவ்சன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்ட நாயகன் விருது வென்றார். மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்தடுத்த போட்டிகள் செப்.17, 19ஆம் தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

summary

Harry Brook's brilliant 114 not out leads England to dominant T20 win over Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments