FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே! சேப்பாக்கத்தில் சாதனைகள் என்ன?

தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே: சேப்பாக்கத்தில் சாதனைகள் பற்றி..

Updated On : 11 ஏப்ரல் 2025, 4:40 pm IST
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றுள்ளார். தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி சென்னை அணி, ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், வெற்றிபெறும் முனைப்புடன் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

கடைசியாக சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் திடலில் குஜராத்துக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டியில் தோனி சிஎஸ்கே வழிநடத்திருந்தார். அதன்பின்னர், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணியை தலைமை தாங்குகிறார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்!

43 வயதான தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 62 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில், 45 போட்டிகளில் வெற்றியும், 17 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

  • சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர்: 246/5 vs ராஜஸ்தான் (2010)

  • சிஎஸ்கேவின் குறைந்தபட்ச ஸ்கோர்: 112/10 vs மும்பை(2012)

  • அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி: சிஎஸ்கே vs பஞ்சாப் (97 ரன்கள்)

  • அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: சிஎஸ்கே vs கொல்கத்தா (9 விக்கெட்டுகள்)

இதையும் படிக்க: ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை பிடிக்கும்: பஞ்சாப் கிங்ஸ் வீரர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments