FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான்: கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருந்தது ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

Updated On : 31 ஆகஸ்ட் 2022, 4:47 pm IST
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisement

Advertisement

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் கடைசி 3 ஓவர்களில் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை வைத்து விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்? 85 நிமிடங்களுக்கு மேல் வீசப்படும் ஓவர்களின்போது வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தாக வேண்டும் என்கிற விதிமுறை ஜனவரி 2022 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐசிசி விதிமுறைகளின்படி 20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியாக வேண்டும். இதனால் பந்துவீசும் அணிக்குப் பின்னடைவு ஏற்படும். வட்டத்துக்கு வெளியே கூடுதல் வீரர்கள் இருந்தால் தானே ரன்களைத் தடுக்க முடியும், விக்கெட்டுகளை எடுக்க முடியும்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments