அஸ்வின், ஷ்ரேயஸ் வெற்றிக்கூட்டணி: இந்தியா 2வது டெஸ்டிலும் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் வங்கதேசம் - இந்திய அணிகள் மோதியது.
முதல் டெஸ்ட்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இரண்டாவது ஆட்டம் மிா்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களையும் , இந்தியா 314 ரன்களையும், எடுத்திருந்தன. ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை இரண்டாவது இன்னிங்ஸில் 70.2 ஓவா்களில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3ம் நாள் முடிவில் இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் 45/4 ரன்களுடன் தள்ளாடி வந்தது.
4வது நாளான இன்று ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயா், அஸ்வினை நம்பி இருந்தது. பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பந்த் 9 ரன்களில் மெஹதி ஹாசன் ஓவரில் எல்பிடபில்யூ ஆனார்.
Advertisement
Advertisement
அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயா் வெற்றிக்கூட்டணி:
பின்னர் ரவிசந்திரன் அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயா் நிதானமாக ஆடி வெற்றிக் கூட்டணி அமைத்தனர். அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்தனர். 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். இது இரண்டாவது அதிகபட்ச பாட்னர்ஷிப் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதற்கு முன் 4வது நாளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் 1932இல் அமர் சிங்- லால் சிங் ஜோடி 74 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரினை 2-0 என் இந்திய அணி வென்றுள்ளது.
ரவிசந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
Great game and a memorable win. #blessed #INDvsBAN pic.twitter.com/hhhW0PBRue
— Ashwin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.