முகப்பு
செய்திகள்

கவாஜா மீண்டும் சதம்: ஆஸி.யை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு

இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார் கவாஜா. 

Updated On : 24 மார்ச் 2022, 4:51 pm IST
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு  351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார் கவாஜா. 

இதையடுத்து 3-வது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 31 ஓவர்களும் நாளை 90 ஓவர்களும் என மொத்தமாக இந்த இலக்கை அடைய பாகிஸ்தான் அணிக்கு 121 ஓவர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.