முகப்பு
செய்திகள்

மகளிர் டி20: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி (ஹைலைட்ஸ் விடியோ)

ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக மந்தனா தேர்வானார். 

Updated On : 14 செப்டம்பர் 2022, 11:18 am IST
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டெர்பியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. பெளச்சியர் 34 ரன்களும் ஃப்ரேயா கெம்ப் 51 ரன்களும் எடுத்தார்கள். ஸ்னேக் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணிக்கு மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ஷெஃபாலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்த மந்தனா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய மகளிர் அணி, 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக மந்தனா தேர்வானார். 

Advertisement

Advertisement

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளன. 3-வது டி20 ஆட்டம் நாளை பிரிஸ்டாலில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments