FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சூரியன் மீண்டும் உதிக்கும்: ஆசியக் கோப்பையில் இடம்பெறாதது குறித்து சஹால்! 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஹாலின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2023, 9:36 pm IST
பகிர்:

சஹால், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும் 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (187) எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

6 அணிகள் களம் காணும் ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டி, ஆகஸ்ட் 30-இல் தொடங்கி செப்டம்பா் 17-இல் நிறைவடைகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹார்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், அக்‌ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

இந்த அணியில் அஸ்வின், சஹால் ஆகியோர் இடம் பெறவில்லை. அணியில் தேர்வாகாதது குறித்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் சூரியன் மேகமூட்டத்துடன் இருக்குமாறும் பின்னர் சூரியன் பிரகாசமாக இருக்குமாறும் பதிவிட்டுள்ளார். 

சூரியன் மீண்டும் உதிக்கும் என்பதைதான் சஹால் மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆசியக் கோப்பை இல்லையென்றால் அடுத்து ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதிலாவது சஹால் பங்கேற்பாரா என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments