FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அஸ்வின்: ரோஹித் கூறிய காரணம்? 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் தேர்வாகியுள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:45 pm IST
பகிர்:

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

94 டெஸ்டில் விளையாடியுள்ள அஸ்வின் 3,185 ரன்களும் 489 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். 24 முறை 4 விக்கெட்டுகள், 34 முறை 5 விக்கெட்டுகள்,  8 முறை 10 விக்கெட்டுகள் என இதுமாதிரி பல சாதனைகளை படைத்துள்ளார் அஸ்வின். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை என அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் அஸ்வின் 21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் திரும்பவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ரோஹித் சர்மா, “கிட்டதட்ட டெஸ்டில் 100 ஒருநாள் போட்டிகளில் 150 போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் மாதிரியான ஒரு ஆள் இருப்பது நல்லது. இது எல்லாம் கடந்த காலமாக இருந்தாலும் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல்லும் விளையாடுகிறார். களத்தில் அவர் உடல் எப்படி இருக்கிறதென புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் அவர் எப்படி பந்து வீசுகிறார் உடல்தகுதி எப்படியிருக்கிறதென பார்க்க ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்வு அமையும்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments