FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கேப்டனாக ஷுப்மன் கில்லின் புதிய சாதனை!

வெளிநாட்டில் விளையாடிய டி20 தொடரில், தொடர்ந்து 4 போட்டிகளில் சூப்பர் ஓவர் இல்லாமல் வெற்றியை பதிவு செய்த முதல் கேப்டன்.

Updated On : 15 ஜூலை 2024, 12:33 pm IST
சுப்மன் கில்
பகிர்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அந்நாட்டு பயணம் மேற்கொண்டது.

Advertisement

Advertisement

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் பங்கேற்ற டி20 தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்த நிலையில், 5-வது போட்டியில் அவர் விளையாடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

மேலும், அந்த தொடரில் இரண்டு போட்டிகள் டையில் முடிந்து, சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments