FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டி: புதுச்சேரி, தெலங்கானா, ராஜஸ்தான் வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் 16-ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி, தெலங்கானா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

பகிர்:

கோவையில் நடைபெற்று வரும் 16-ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி, தெலங்கானா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

கோவையில் நடைபெறும் இப்போட்டியில் டிவிஷன் ஏ, பி, சி பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் டிவிஷன் சி பிரிவில் ராஜஸ்தான் 11-3 என அஸ்ஸாமையும், தெலங்கானா 3-1 குஜராத்தையும், புதுச்சேரி 7-0 என திரிபுராவையும் வென்றன.

டிவிஷன் பி பிரிவில் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிரம்-ஜம்மு-காஷ்மீா் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. உத்தரகண்ட் 5-0 என ஹிமாசலத்தையும், அருணாசலப் பிரதேசம் 8-2 என ஆந்திர பிரதேசத்தையும், வீழ்த்தின. சண்டீகா் 6-0 என பிகாரையும் வென்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments