FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: நீச்சல் போட்டியில் பதக்கத்தை தவறவிட்ட ரிஷப் தாஸ்!

ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் தாஸ் 6ஆம் இடம் பிடித்துள்ளது குறித்து...

20 செப்டம்பர் 2026, 6:56 pm IST
இந்திய வீரர் ரிஷப் தாஸ் - எக்ஸ்
பகிர்:

ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் தாஸ் 6ஆம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 54.77 விநாடிகளில் இவர் இலக்கை எட்டினார்.

இறுதிப்போட்டிக்கு முன்பு நடந்த தகுதிப்போட்டியில் 54.85 விநாடிகளில் இலக்கை எட்டியிருந்தாலும், அவரின் புள்ளிகள் பதக்கம் வெல்வதற்கு போதுமானதாக இல்லை.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.

Advertisement

Advertisement

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் ரிஷப் தாஸ் கலந்துகொண்டு சிறப்பான பங்களிப்பை அளித்தார். இறுதிப்போட்டியில் இவர் 54.77 விநாடிகளில் இலக்கை எட்டி 6வது இடம் பிடித்தார். இது இவரின் தனிப்பட்ட சாதனையாக பார்க்கப்படுகிறது.

எனினும் பதக்கம் வெல்வதற்கான முயற்சியில் இவர் பின்தங்கினார். சீனாவின் ஸு ஜியாவு 51.98 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

ஜப்பானின் தகேஹரா ஹிடேகாஸு 53.93 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் லீ ஜூஹு 53.94 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

summary

Asian Games 2026: Rishabh Das Finishes Sixth in 100m Backstroke Final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments