ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றது பற்றி...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல்முறையாக கமல்ஜீத் - சுருச்சி இணை 484.6 புள்ளிகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த பிரிவில், தென் கொரியா அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஈரான் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியிருந்த இந்திய துப்பாக்கி சுடுதல் அணி, இறுதியாக ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பெறும் இரண்டாவது தங்கம் இதுவாகும். முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.
மொத்தம் 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. சீனா மொத்தம் 85 தங்கம் உள்பட 135 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
Asian Games! India's second gold - 10 m air pistol
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.