FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜூன் 14-இல் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

​ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

28 ஜனவரி 2024, 8:52 am IST
பகிர்:


ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

"அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

எம்எல்ஏ-க்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

கரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்கள் தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது."

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா போன்றோர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments