மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில்அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
முன்னதாக அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | கச்சத்தீவு: ஸ்டாலின் கேட்டதும் கருணாநிதி சொன்னதும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.