FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ-சைக்கிள்

கொலைக் குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ-ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

Updated On : 10 ஜூன் 2023, 12:03 pm IST
இ-சைக்கிள்
பகிர்:


கோவையில், ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் சூரிய ஒளியில் செயல்படும் இ- சைக்கிளை கண்டுபிடித்துள்ளார். கொலைக் குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ-ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சார்ந்த இவர், காதல் விவகாரத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

8 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தக் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். 

Advertisement

Advertisement

அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார். இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, பிளக் மற்றும் டைனமோ உதவியுடன் சார்ஜ் செய்ய முடியும். வழக்கமான சைக்கிள் ஆகவும், தேவைப்பட்டால் இ-பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 

போலீஸ் பேட்ரோல், நகர்புறத்தில் பயணம் உள்ளிட்டவைகளுக்கு இவை பயன்படும் என தெரிகின்றன. தற்போது முதல் முயற்சியாக சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ-ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை புத்திக் கூர்மையுடன் பயன்படுத்தி இதுபோன்று இ-பைக், இ-ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கின்றன. சிறைத் துறை அதிகாரிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments