FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல: கிருஷ்ணசாமி பேட்டி

பாஜக-அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்கமால் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல சரி செய்யப்படக் கூடியது என்று  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

Updated On : 28 செப்டம்பர் 2023, 1:58 pm IST
பகிர்:


சென்னை: பாஜக-அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்கமால் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல சரி செய்யப்படக் கூடியது என்று  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியார்களை சந்தித்தார். 

அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.  அந்த வரிசையில், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் குறைந்தது மூன்று மாதங்களுக்கு தெருமுனை பிரசாரம் நடத்த உள்ளோம்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடப்பது வழக்கம், அங்கு டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெறும்.

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதியாக மின் கட்டண உயர்வு இருக்காது என்று சொன்னார்கள் அதனையும் செய்யவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகள் பீக் அவர்ஸ் சார்ஜஸ் காரணத்தால் பாதிக்கின்றன, இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திமுகவை பொருத்தவரை ஆட்சியில் இல்லாதபோது காவிரி பிரச்னையை முன்னிறுத்தி போரட்டம் நடத்தினார்கள். இப்போது காவிரி மேலாண்மை தெரிவித்துள்ள அளவு நீரை கூட அவர்களால் வாங்கித் தர முடியவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர்  மௌனமாக இருந்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கைக் கூட வெளியிடவில்லை. 

தமிழ்நாட்டில் உள்ள 53 சுங்கச் சாவடிகளில் 20 மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் குத்தகை முடிந்ததாக தகவல் உள்ளது. இன்று வரை சட்ட விரோதமாக கட்டணம் வசூலிக்கப்டுகிறது. இது குறித்து வெள்ளை அறிக்கை மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறை வெளியிட வேண்டும்.

சுங்கச் சாவடிகள் வழிப்பறி போல் அதிக கட்டணம் வசூல் செய்கிறது. மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி சட்ட விரோதமான செயல்படக் கூடிய சுங்கச் சாவடிகளை மூட வேண்டும்.

பாஜக-அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்காமல் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல சரி செய்யப்படக் கூடியது.

பாஜக-அதிமுக மாநில தலைவர்களுக்கு இடையில் நடந்த சின்ன கருத்து மோதலால் நடந்த முடிவு. இது கொள்கை ரீதியான முடிவு அல்ல. நிச்சயமாக பாஜக மேலிடம் தலையிட்டு நல்ல முடிவை எடுக்கும்.

இப்போது வரை கூட்டணி குறித்த எந்த முடிவும் இல்லை. தேவைப்பட்டால் தேர்தல் நேரத்தில் புதிய தமிழகம் கட்சி முடிவினை அறிவிக்கும்.

வார்த்தை போரால் ஏற்பட்ட பிரச்னைக்காக தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்து விடும் என்று கருதவில்லை. கூட்டணி இருக்கும் பொழுது வெற்றி பெறக்கூடிய சூழலில் பிரிவு ஏற்பட வேண்டுமா என்று கேள்வி எழுகிறது.

புதிய தமிழகம் கட்சி சார்பில் தில்லியில் பாஜக முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு இந்த கூட்டணி சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேசி உள்ளேன் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments