FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2015-ஐ விட மோசமாக இருக்கிறது: நடிகர் விஷால் ஆவேஷம்! 

மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட அசௌகரியம் குறித்து சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.

Updated On : 5 டிசம்பர் 2023, 8:38 am IST
பகிர்:

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச.3) மாலை முதல் திங்கள்கிழமை (டிச.4) இரவு வரை  சென்னையில் பலத்த மழை பெய்தது.

இந்த இடைவிடாத மிக கன மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். அதேவேளையில், மின்சாரம் பாய்ந்தும், கட்டடம், மரம் விழுந்தும் பொதுமக்கள் உயிரிழந்தனா். பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. 

இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விடியோவினை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால், “நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். 2015இல் இப்படி நடந்தது. எப்படியோ சமாளித்துவிட்டோம். ஆனால் 8 வருஷம் கழித்து அதைவிடவும் மோசமாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

மழைநீர் வடிகால் சேமிப்புக்கு என்று ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதை எங்கு திடங்கினார்கள் எங்கு முடித்தார்கள் எனத் தெரியவில்லை. வாக்களிக்கும் ஒரு வாக்காளனாக ஒரு விண்ணப்பத்தினை முன் வைக்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து மக்களுக்கு உதவ வேண்டும். இது அரசியல் குறித்த விமர்சனம் கிடையாது. தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமாக கேவலாமானதாக இருக்கிறது. எதற்காக வரி கட்டுகிறோம் எனக் கேள்வி கேட்க வைக்காதீர்கள். தேர்தலுக்குப் பிறகு இந்த மாதிரி நேரத்தில் உங்களின் முகம் தெரிந்தால் நல்லது” எனப் பேசியுள்ளார். 

மேலும் தனது எக்ஸ் பதிவில், “மழைநீர் வடிகால் திட்டம்  சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா? ” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments