செந்தில் பாலாஜி விவகாரம்: ஆளுநரிடம் அதிமுக நிர்வாகிகள் மனு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து மனு அளிக்கின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், பெஞ்சமின், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினர்.
சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றக் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.