கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026
கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் போடுவதை அரசு உறுதி செய்யும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக அரசின் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் செய்வதை அரசு உறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். காலை 10 மணிக்குத் தொடங்கிய பட்ஜெட், பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
Advertisement
Advertisement
அதில், பல ஆண்டுகளாக சென்னை மக்களின் கனவாக இருக்கும் ஒரு அறிவிப்பும் பல கட்சிகள் வெளியிட்டு வந்த ஒரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த நதிகளான அடையாறு மற்றும் கூவம் இன்று ஒரு கழிவுநீர் நதியாக மாறியிருப்பது நம்மில் பலருக்கு வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டினை இதற்கு முன், மாறி மாறி ஆண்ட அரசுகள் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சுத்தப்படுத்தவும், அழகுபடுத்தவும் பல நூறு கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்தும் ஆறுகளின் தன்மையில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.
உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான நாகரிகங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, இன்கா, மெசபடோமியா ஆகியவை பெருநதிகளின் அருகிலேயே தழைத்தன.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வர நமது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கடுமையாக பாடுபடும்.
சியோல் நகரத்தின் சியோங் கியே சியோன் (Cheonggyecheon) நதி, சிங்கப்பூர் நகரத்தின் கல்லாங் (Kallang) நதி போன்றவை நதிகள் மறுசீரமைப்பின் மூலம், அந்நகரங்களின் உலகளவில் பேசப்படும் அடையாளங்களாக மாறிவிட்டன.
கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதும், குழந்தைகள் ஆனந்தக் குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதையும் நமது அரசு உறுதிசெய்யும்.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu budget announces that the government will ensure the facility for a delightful dip in the Cooum and Adyar rivers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.