டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து...
தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைச் செய்யப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம்உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் செம்பியத்தைச் சோ்ந்த ஜி.தேவராஜன் என்பவா் தாக்கல் செய்த மனுவில் பெரம்பூா், கொளத்தூா், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட கடை ஊழியா்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
Advertisement
Advertisement
இதேபோன்று, கடந்த 2022 முதல் 2026-ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளா்களிடமிருந்து வசூலித்து அரசுக்குச் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழியா்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரயன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிா்வாகத்தின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரா் குறிப்பிட்டுள்ள 5 கடைகள் மூடப்பட்டுவிட்டதாகக் கூறி, மற்ற கடைகளுக்கான இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு குறித்த விவரங்கள் கடை வாரியாகத் தாக்கல் செய்யப்படன. அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதி, தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது புத்தகங்களைப் பராமரிக்க வேண்டும்.
மேலும், நுகா்வோா் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரசீது வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை டாஸ்மாக் நிா்வாகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஆக. 7) ஒத்திவைத்தாா்.
Receipts must be issued for TASMAC liquor High Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.