FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கரூர் அரசுப்பணி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது பற்றி...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 9:01 am IST
பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணி வழங்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் / உச்சநீதிமன்றம்
பகிர்:

கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தவெக அரசு ஜூலை 27-ல் அரசு வேலை வழங்கியது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல அரசுப்பணி பெற்றவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 23-ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

summary

Karur stampede government job case: Hearing in the Supreme Court today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments