FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து பேரவையில் முதல்வர் விஜய் பேசியது...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 11:27 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - TN Assembly
பகிர்:

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

அப்போது திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிக் கொண்டிருக்கும்போது, தவெக, திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

Advertisement

இதற்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது:

”ஆதாரம் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசுகையில், மூன்று துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருக்கிறது என்றார். அது போகிற போக்கில் சொன்னது இல்லை. அனைத்து ஊழல்களும் ஆதாரங்களுடன் இருக்கின்றன. அதனை திறக்க வைத்துவிடாதீர்கள். எதை எப்போது திறக்க வேண்டுமோ, அதை அப்போது திறப்போம்.

மக்களிடம் எப்போது, என்ன, எப்படி பேச வேண்டும் என தெரியும். அதனால்தான் அன்புடன் இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஐ. பெரியசாமி, “அன்பு, ஆசையாக பேசிதான் ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளேன். இருமுறை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

summary

We will release evidence of corruption at the right time! Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments