FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 31 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

முதல்வர் விஜய்.
பகிர்:
Updated On : 31 ஆகஸ்ட் 2026, 9:34 pm

சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: பேரணி குறித்து மனம் திறந்த அபிஜீத் தீப்கே!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான செளரவ் தாஸ், அசுதோஷ் ராணா மீது கொண்டிருந்த கோபம் குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மனம் திறந்து பேசியுள்ளார்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 9:33 pm

ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் இருதரப்பு உறவுகள், போர் நிறுத்தம், ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசி வருகின்றனர்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 8:25 pm

நேபாள வெள்ளத்துக்கு யார் காரணம்? விளக்கமளித்த சீனா!

நேபாள வெள்ளத்துக்கு சீனத்தின் நீர்மின் திட்டங்கள்தான் காரணம் என்ற விமர்சனத்தை அந்த நாடு திங்கள்கிழமை (ஆக. 31) மறுத்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 3:05 pm

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை!

சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 2:50 pm

தவெக அரசுக்கு எத்தனை மதிப்பெண்? நயினார் நகேந்திரன் பதில்! தேர்ச்சி பெற்றதா தவெக?

தமிழ்நாட்டில் நடக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் என்று நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 1:52 pm

சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக எம்எல்ஏ!

புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிலை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் நோக்கில் திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் சட்டப்பேரவைக்கு நடந்தே வந்துள்ளார்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 12:48 pm

தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 12:19 pm

கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 11:11 am

சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல்

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாலை விரிவாக்கம் குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரித்து வெளியிடப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 11:11 am

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரூ.3 உயர்த்தி கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.

Updated On : 31 ஆகஸ்ட் 2026, 11:00 am

முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் விஜய்க்கு துளியும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments