கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
ரெட் அலர்ட்!
வட மாநிலங்கள், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்கு இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
2029-ல் மோடியே பிரதமர்!
2029 மக்களவை தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார், பாஜக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சித் தாவல் புகார்: பேரவைத் தலைவரிடம் முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம்!
சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!
புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 10) ஆஜராக உத்தரவிட்டிடப்பட்டிருந்த நிலையில் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!
மேற்கு ஆசியாவில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும்!
கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரித்துள்ளார்.
ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 9) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்!
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையை முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்குகிறார்.
தங்கம் வாங்கலாமா?
தொடர்ந்து 4 ஆவது நாளாக தங்கம் விலை குறைந்தது...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.