FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 14 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 14 ஜூலை 2026, 10:36 pm IST
பணிநியமன ஆணை வழங்கும் விழாவி முதல்வர் சி. ஜோசப் விஜய் - TNDIPR
பகிர்:

விசாரணைக் கைதி மரணம் : 3 பேர் கைது

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் இன்று (ஜூலை 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போன்! அறிமுகம் செய்தது சீனா!

சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஸ்டெப்ஃபன், உலகின் முதல் வெகுஜனச் சந்தைக்கான ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. முற்றிலும் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு ஸ்டெப் எக்ஸ் நியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சோனியா காந்தியை சந்தித்த வைகோ!

தில்லி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

Advertisement

Advertisement

எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79)உடல்நலக் குறைவால் காலமானால். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 3வது மொழிப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்3 என்று கூறப்படும் 3வது மொழிப் பாடத்துக்கு, பள்ளிகள் நடத்தும் உள்நிலைத் தேர்வுகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

வியத்நாம் படகு விபத்து: சென்னை விமான நிலையம் வந்த உடல்கள்!

வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களில், 10 பேர் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கின.

92 லட்சம் பெண்கள் நீக்கம்

மகாராஷ்டிரத்தில் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 92 லட்சம் பயனர்களை அந்த மாநில அரசு நீக்கியுள்ளது.

அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் 

அன்பு சாம்ராஜ்ஜியம்

தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம், இதை யாராலும் அசைக்க முடியாது என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

நலம் டிஎன்

மருத்துவத்துறையை சார்ந்த நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூலை 14) தொடக்கி வைத்தார்.

பணி நியமன ஆணை

சென்னையில் மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை வழங்கினார்.

ரூ. 100 கோடி மோசடி!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 14) சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.

பாய்லர் வெடித்து ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 755. 83 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments