இன்றைய ஜூலை 29 செய்திகள் - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?
திருப்பதி நெடுஞ்சாலை அருகே நிலம் வாங்குவோருக்கு வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம் பெற்றுத் தரப்படும் என விளம்பரம் செய்த நில விற்பனை நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்திருக்கிறது.
ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?
2025 - 26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறதே என்று ஜூலை 31ஆம் தேதி வரை காத்திருப்பது நல்ல யோசனை அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
மக்களவையில் பேசத் தடுத்ததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்தி
மக்களவையில் பேசத் தடுத்த கருத்துகள் அனைத்தையும் செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் ஆய்வு!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் முதல்வர் ஜோசப் விஜய், மெட்ரோ தலைமையகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர் விஜய்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்.
தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?
தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் - தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு
மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டுக்கு என்று இருந்த 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை பெற தவறிவிட்ட தவெக அரசுக்கு தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்புமணி தேர்வு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம்’ - இளையராஜா வேண்டுகோள்!
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவோம் என்று இசைஞானி இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி!
காமன்வெல்த் ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
குதிரை பேரம் - சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.க்கள் போராட்டம்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் பாஜகவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு!
நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் குற்றப்பத்திரிகையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள சிபிஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், விசாரணையை தில்லி விரைவு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கொளத்தூரில் மறுவாக்கு எண்ணிக்கை!
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமாக 14 மின்னணு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
செந்தில் பாலாஜி வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குறிப்பு போலீசார் புதன்கிழமை காலை 6 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!
சென்னை - செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்புமனு தகவல்கள் தொடர்பான வழக்கு, துணைவேந்தர்கள் நியமன வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.