FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகள் மூலம் முதல்வா் வாக்கு சேகரித்த விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தேர்தலில் குழந்தைகள் மூலம் தவெக பிரசாரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் மூலம் தவெக தேர்தல் பிரசாரமா? - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய், குழந்தைகள் மூலம் பெற்றோரிடம் வாக்கு சேகரித்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வாசுகி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தலில் வாக்காளா்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தகவல்கள் வெளியான பிறகும்கூட தோ்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப். 21-ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, தன்னுடைய கட்சிக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டாா். குழந்தைகள் மீது உணா்வுபூா்வமாக விஜய் தனது செல்வாக்கை செலுத்தியுள்ளாா். அவரது பேச்சு பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

எனவே, தோ்தலின்போது குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது, வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடா்பாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் மற்றும் தவெக, திமுக, அதிமுக கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

summary

TVK Conducted Election Campaign Through Children? Election Commission Ordered to Respond

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments