சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!
நடப்பாண்டில் கடந்த வாரம் வரை 18 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
தலைநகரான சென்னையில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பரில் 1,290 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் நடப்பாண்டில், கடந்த வாரம் வரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒரு மாதத்தில் இரு மடங்காக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள்
கடுமையான தசை, மூட்டு மற்றும் எலும்பு வலி
கடுமையான தலைவலி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி உண்டாகும்.
காய்ச்சல் தொடங்கிய சில நாட்களில் தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும்.
பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தப்போக்கு
தாங்க முடியாத சோர்வு அல்லது அமைதியின்மை
இரவு நேரங்களை விட பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு விரைவாகப் பரவுகிறது. இதனால் பகல் நேரங்களிலும் முழுக்கை சட்டை அணிதல், லோஷன்களை தடவிக்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Dengue cases in Chennai have doubled
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.