FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரவருணியை பாதுகாக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரவருணியை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தியிருப்பது பற்றி...

சௌமியா அன்புமணி
பகிர்:

தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரவருணியை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவைக் குழு தலைவருமான சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக பேசினார். ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் அந்த கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கட்சி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாகவே இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான மக்கள் ஏராளமானோர் இருப்பதாகவும் அவர் கூறினார். தாமிரவருணியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமிரவருணி ஆற்றை பாதுகாப்பது தொடர்பாகவும் சௌமியா அன்புமணி முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.

Advertisement

Advertisement

தமிழக அரசிடம் தாமிரவருணியை முழுமையாக சுத்தப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வலியுறுத்துவோம் என்றார். தாமிரவருணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரவருணியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ரூ.59 கோடி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்

தாமிரவருணி கரையில் ரூ.59 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். ஜெர்மன் வங்கி உதவியுடன் கிடைக்கும் ரூ.59 கோடி நிதியை வெறும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தாமல்,

தாமிரவருணி கரையில் உள்ள பழமையான கல் மண்டபங்கள், படித்துறைகள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை சீரமைக்கவும், ஆற்றைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தாமிரவருணி ஆற்றங்கரை தற்போது மாசடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த சௌமியா அன்புமணி,

தாமிரவருணியின் தூய்மை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தாமிரவருணி வெறும் ஆறு அல்ல; தென் தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் பண்பாட்டு அடையாளம். அதை பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

summary

Sowmya Anbumani, President of Green Peaces (Pasumai Thayagam) and leader of the PMK legislative party, has urged the Tamil Nadu government to protect the Thamirabarani River, the primary lifeline of South Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments