FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

முதல்வர் விஜய்யுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு...

10 அக்டோபர் 2026, 5:16 pm IST
முதல்வர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு - X
பகிர்:

முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். அங்கு ராகுலுக்கு மதிய விருந்து அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் வரவேற்றனர்.

Advertisement

Advertisement

அங்கிருந்து ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் சார்பில் மதிய விருந்து அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருந்துடன் இருவரும் கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசுவதாகத் தெரிகிறது.

முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, தில்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு முதல்வா் விஜய் சென்றாா். அதன்பின் இருவரும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல எஸ்ஐஆர், ஞானேஷ் குமார் விவகாரத்தில் ராகுல் காந்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முதல்வர் விஜய் இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தில்லி திரும்புகிறார்.

summary

LoP Rahul gandhi meets CM vijay in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments