முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா தம்பதி!
நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷிமிகா ஜோடியாக முதல்வர் விஜய்யை சந்தித்தது குறித்து...
நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷிமிகா ஆகியோர் தம்பதியாக முதல்வர் விஜய்யை இன்று (அக். 12) சந்தித்தனர்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஜோடியாக முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், திருமணம் குறித்தும், விரைவில் இவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள ரணபாலி படம் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
அன்பிற்குரிய தளபதி விஜய்யுடன் நேரத்தைச் செலவிட்டது அழகாக இருந்தது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு எங்களை சந்தித்தாலும், எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றார். அத்துடன் வாழ்க்கை குறித்த தனது தனிப்பட்ட கருத்துகளையும் பணிகள் மற்றும் உலக நடப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
ஒரே ஒரு சந்திப்பிலேயே அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். மீண்டும் சந்திக்கும் வரை, எனது அன்பும் மரியாதையும். விஜய் தேவரகொண்டா எனப் பதிவிட்டுள்ளார்.
வாரிசு படத்தில்விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திரைத் துறையில் பலரும் ஆச்சரியப்படும் ஜோடியாக வலம் வரும் இவர்கள் நடிப்பில் ரணபாலி திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகவுள்ளது.
Vijay Deverakonda and Rashmika meet Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.