FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேசியது குறித்து...

13 அக்டோபர் 2026, 8:42 pm IST
முதல்வர் விஜய் - யூடியூப்
பகிர்:

இரு மாநில வளர்ச்சி குறித்து சந்திரபாபு நாயுடு உடன் ஆலோசனை நடத்தியதாக ஆந்திரத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசினார்.

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் இன்று ஆந்திரத்திற்குச் சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்றார்.

Advertisement

Advertisement

அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

பிறகு, அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்தும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பு குறித்தும் பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற அமராவதி உற்சவ நவராத்திரி விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இருவரும் ஒரே காரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆந்திர பாரம்பரிய நடனத்துடன் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளை இரு மாநில முதல்வர்களும் அருகருகே அமர்ந்து கண்டுகளித்தனர்.

நிகழ்ச்சியில் முடிவில் தமிழக முதல்வர் விஜய்க்கும், அவருடன் சென்ற அமைச்சர்களுக்கும் மேடையில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், தெலுங்மு மொழியில் வணக்கம் கூறி, விஜயவாடா மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து அவர் தெலுங்கில் பேசியதாவது:

நவராத்திரி விழாவுக்கு என்னை அழைத்ததற்கும் உங்கள் வரவேற்புக்கும் நன்றி. உங்கள் விருந்தோம்பலால் மனம் நிறைந்தது. தமிழக - ஆந்திர மாநில வளர்ச்சி குறித்து சந்திரபாபு நாயுடு உடன் ஆலோசனை நடத்தினோம். வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவருடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி எனப் பேசினார்.

பிறகு, என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும் என தமிழில் பேசி தனது உரையை முதல்வர் விஜய் நிறைவு செய்தார்.

summary

Consultation on the development of both states: CM Vijay speaks in Andhra Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments