கோவை புறப்பட்டார் முதல்வர் விஜய்!
கோவையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து முதல்வர் விஜய் கோவை புறப்பட்டார்.
கோவையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து முதல்வர் விஜய் கோவை புறப்பட்டார்.
கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா்.
விழாவில் பங்கேற்பதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை செல்கிறார்.
Advertisement
Advertisement
கோவை வந்தடையும் முதல்வர் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் பெரியாா் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்துவைக்கிறாா்.
தொடா்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதனிடையே, கோவை விமான நிலையத்தில் தொடங்கி, அவிநாசி சாலை, காமராஜர் சாலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் அறிவுலகம் வரையில் 11.4 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் விஜய் இன்று சாலை வலம் செல்லவிருக்கிறார்.
இதையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Chief Minister Vijay has set off for Coimbatore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.