FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை புழல் சிறையில் வீரமணியிடம் காவல்துறை விசாரணை!

சென்னை புழல் சிறையில் வீரமணியிடம் காவல்துறை விசாரணை...

57 வினாடிகள் முன்பு
வீரமணி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்சோ வீரமணியிடம் சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கடந்த ஆக. 29 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இதுவரை 15 -க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கார் ஓட்டுநர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றக் காவலில் உள்ள வீரமணியை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். இதையடுத்து சென்னை புழல் சிறையில் வீரமணியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

நாளை மாலை 7 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க எண்

இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க, தகவல் தெரிவிக்க 9345319676 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மூலமாகவும் இந்த எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.

summary

Police investigation to veeramani in puzhal jail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments