FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உச்சநீதிமன்றம், சென்னை, தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 9) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

54 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்றம், சென்னை, தில்லி உயர்நீதிமன்றத்தில் செப். 9- எந்தெந்த வழக்குகள் விசாரணை?
பகிர்:

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

* மேக்கேதாட்டு குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் சேர்க்கப்பட்டது.

இதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஏக மனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இரண்டு வாரங்களில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்த இந்த வழக்கு இன்று(செப்.9) விசாரணைக்கு வருகிறது.

* திருப்பூா் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்புமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு செப்.14-ஆம் தேதி முதல் செப்.17-ஆம் தேதி வரை காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகா் சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம்.

எனவே, இதுகுறித்து நாங்கள் அளித்துள்ள விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசுத் தரப்பில், இதுதொடா்பாக மாவட்ட காவல்துறையிடம் கேட்டு பதிலளிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த இந்த வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

1. 2022-ல் பாரத் ஜோடோ பாத யாத்திரையின் போது இந்திய ராணுவத்திற்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில் ராகுல் காந்தியின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

2. நில மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியின் உதவியாளர் சுமித் ராய் தாக்கல் செய்த மனு.

3. சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனு.

4. அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் லிமிடெட் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில், போலிப் பதிவு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி பத்திரிகையாளர் ரவி நாயர் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் வழக்குகள்

1. சிஜேபி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தொடர்ந்த அவதூறு வழக்கு.

2. ஜெய்ப்பூர் போலோ மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிராக இந்திய போலோ சங்கம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.

summary

Important cases listed in the Supreme Court, High Court on Wednesday, September 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments