மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்கள் யார்? குழப்பத்தில் கட்சித் தலைமை
மதுராந்தகம், தாராபுரம் தவெக வேட்பாளர்கள் யார் என்பதில் கட்சித் தலைமை நடத்தும் ஆலோசனை பற்றி..
தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சித் தலைமை குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மரகதம் குமரவேல், தவெகவில் இணைந்துவிட்டார்.
அவர் மீண்டும் எம்எல்ஏ பதவி அல்லது கட்சிப் பதவியை கோரியிருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதா அல்லது மதுராந்தகம் தொகுதியில் தவெகவில் போட்டியிட்டு இரண்டாம் இடம்பிடித்த எழில் கேத்ரினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா என்று பேசப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அதிமுகவிலிருந்து வந்தவருக்கு வாய்ப்பு வழங்கினால், இத்தனை நாள்கள் தவெகவில் பணியாற்றியவர்கள் அதிருப்தி அடையாளம் என்று ஒரு தரப்பும், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக பலம் வாய்ந்திருக்கிறது என்பதால், மீண்டும் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என மற்றொரு தரப்பு கூறுவதால் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா அல்லது தவெகவினர் வேறு யாருக்காவது வாய்ப்பு வழங்கலாமா என்றும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
முதல்வர் விஜய் லண்டன் செல்லவிருப்பதால், இன்று இரவுக்குள், இரு தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்களையும் இறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.