FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் விஜய் அறிவிப்பார்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

2029 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு...

10 செப்டம்பர் 2026, 7:39 pm IST
தமிழக முதல்வர் விஜய் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

2029 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் இன்று (செப். 10) திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் வரும் 2029 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறுவதில் எந்தவொரு தயக்கமும் இல்லை. நான் பிறப்பால் ஒரு காங்கிரஸ் தொண்டன். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே தேர்வு செய்யப்படுவார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஒற்றை வரி நிலைப்பாடு.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களின் கட்சித் தலைவரை வேட்பாளராக முன்மொழிவதில் எந்தவொரு தவறும் இல்லை. ஒரு காங்கிரஸ் அமைச்சராக, வரும் 2029 தேர்தலில் எங்களின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். நிச்சயமாக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் விஜய்யும் அறிவிப்பார், அறிவிக்கக் கூடும். தவெக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள் இணைய வேண்டும். இணைவார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

TN Minister Viswanathan has stated that Rahul Gandhi is the INDIA bloc's PM candidate for the 2029 Lok Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments