கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை! பயணிகள் புகார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார்...
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.
வருகிற செப். 14 - திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இதனால் நேற்று இரவு முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இன்று காலை முதலும் பயணிகள் அதிகளவில் ஊருக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கத்திற்குச் சென்றனர். இதில் பலரும் முன்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது நிர்மல் ராஜிடம் பயணிகள் புகார் கூறியதையடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
அதேபோல இன்று காலை முதலே சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. வழக்கமாக 8 வழிகள் இருக்கும் மேலும் 2 வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் விடப்படுகின்றன.
பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Buses not operating properly from Kilambakkam: Passengers complain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.