FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்: அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து...

14 செப்டம்பர் 2026, 8:26 am IST
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா - Video Grab
பகிர்:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர்.

தமிழகம் முழுவதும் இன்று (செப். 14) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 36,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

Advertisement

Advertisement

சிவகங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற குடைவரைக் கோயிலான இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்தக் கோயிலில் மலையைக் குடைந்து 6 அடி உயரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் செப். 5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சதுர்த்தியை முன்​னிட்டு, அதி​காலை​யில் கோயில் நடைதிறக்​கப்பட்​டு, சிறப்பு பூஜைகள் நடை​பெறுகின்றன.

summary

Thousands of devotees queue up at Karpaga Vinayakar Temple in Pillayarpatti on the occasion of Vinayagar Chaturthi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments