பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்வி
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதை விமர்சித்து அன்புமணி பேசியது குறித்து...
முதல்வர் விஜய் கடந்த காலத்தைப் பற்றி பேசுவது ஏன்? என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அன்புமணி பேசியதாவது:
பிக் பாஸ், ஐபிஎல் பார்த்த இளைஞர்கள் இப்போது சட்டப்பேரவை நேரலை பார்ப்பதால், சட்டப்பேரவையில் ஒரு சூப்பர்ஸ்டார். அவர் சூப்பர் ஸ்டார் இல்லை. தமிழ்நாட்டிற்கு மொத்தம் 4 சூப்பர் ஸ்டார்கள்தான். அதில் இரண்டு மேடையில் உள்ளன.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஏன் கடந்த காலத்தைப்பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. சர்க்காரியா கமிஷன், ஜெயின் கமிஷன் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்குத்தானே அவர்கள் எதிர் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கதான் ஆளும் கட்சி வரிசையில் இருக்கின்றீர்கள். திரும்ப திரும்ப பழைய கதையைப் பேசுவது ஏன்?
மக்கள் வாக்களித்து முதல்வராக்கியிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். 1.30 கோடி இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. வேலை இல்லாத காரணத்தால்தான் குடிப்பழக்கம் அதிகரிக்கிறது. கிராமத்தில் இதுதான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மிகவும் பின் தங்கிய மாவட்டம். 10வது, 12வது தேர்வு முடிவுகளில் கடைசி. ஒன்றில் மட்டுமே முதலிடத்தில் இருக்கிறது. அதுதான் டாஸ்மாக். நமது மாவட்டத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துச்செல்வது எப்படி? என்று ஆக்கப்பூர்வமாகப் பேச வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கத்தைத் தொடர்ந்து கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. வேலை கொடுத்திருந்தால் இளைஞர்கள் இந்த அளவுக்கு திசை திரும்பியிருக்கமாட்டார்கள் என அன்புமணி குறிப்பிட்டார்.
Why does Vijay speak only about the past in the Assembly? Anbumani asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.