FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடைத்தேர்தல்! முதல்வர் விஜய் 4 நாள்கள் பிரசாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் பிரசாரம் பற்றி...

18 செப்டம்பர் 2026, 12:20 pm IST
முதல்வர் விஜய் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை தவிர, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக கட்சியைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இருவரையும் ஆதரித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய் விரைவில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தாராபுரத்தில் 2 நாள்களும், மதுராந்தகத்தில் 2 நாள்களும் முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் போட்டியிடும் இரண்டு தவெக வேட்பாளர்களும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர், தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

summary

By-election! Chief Minister Vijay to campaign for four days!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments