சென்னையில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்!
சென்னை ராயபுரத்தில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்...
சென்னை ராயபுரத்தில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின்வெட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சென்னையில் ராயபுரம் பகுதியில் தொடர் மின்வெட்டு இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று இரவு மின்வெட்டின்போது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவுக்கு எதிராக மக்கள் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் மின்வெட்டு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
powercut in various places in chennai; people protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.