FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் 8 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

21 செப்டம்பர் 2026, 12:44 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 2 நாள்கள் 8 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத்தை ஆதரித்து செப். 24, 26 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அதன்படி, செப்.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாமண்டூா், மாலை 4.30 மணிக்கு பூதூா், மாலை 6 மணிக்கு தேவத்தூா், இரவு 7 மணிக்கு சரவம்பாக்கம் ஆகிய இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

Advertisement

Advertisement

செப். 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு எல்.எண்டத்தூா், மாலை 4.30 மணிக்கு ராமாபுரம், மாலை 6 மணிக்கு எலப்பாக்கம், இரவு 7 மணிக்கு ஒரத்தி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறாா்.

பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் அதிமுக பணிக்குழு பொறுப்பாளா்கள் செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments