FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூவம் ஆற்றில் நடைபாதை, மிதிவண்டி பாதை, பசுமைப் பகுதிகள் அமைக்கத் திட்டம்! முதல்வர் ஆலோசனை

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்...

22 செப்டம்பர் 2026, 4:10 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்... - DIPR
பகிர்:

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு, 2026 – 2027 நிதிநிலை அறிக்கையில் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

Advertisement

Advertisement

அதனடிப்படையில், இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வர் , கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதி செய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் (DPR) தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். 

இதன் தொடக்க நடவடிக்கையாக, கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் (Concept Plan) மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ள, முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ நீளமுள்ள பகுதிகளில், நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூகப் பயன்பாட்டு வசதிகள், இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பு பல்வேறு கட்டங்களாக  ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச்செல்ல முதல்வர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

summary

Cooum River Restoration Review Meeting by CM vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments