FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதமர் வேட்பாளர் விஜய்யா? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்

2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதன் கூறியது பற்றி...

26 செப்டம்பர் 2026, 7:46 pm IST
தமிழக முதல்வர் விஜய் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

வருகிற 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் விஜய்தான் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவார் என தவெக அமைச்சர்கள் கூறுவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தென்காசியில் செய்தியாளர்களுடன் பெ. விஸ்வநாதன் பேசியதாவது, "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இருக்கிற காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வு எதுவென்றால், 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் என்பது. இதில் பத்திரிகையாளர்களோ ஊடகவியலாளர்களோ எழுப்பும் குளறுபடிகள் எதுவுமே கிடையாது.

Advertisement

Advertisement

தவெக அமைச்சர் நிர்மல் குமாரோ வேறு யாரேனும் சொன்னால் என்ன? ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என தமிழக முதல்வர் விஜய்யே அறிவிப்பார்.

2021 - 2026 வரையிலான திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்தது. சட்டப்பேரவையில் வெளிநடப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது வெளிநடப்பு, ஜெய்ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பிய பிரச்னை, தமிழக அரசுக்கு எதிரான அரசியல் நடத்திய பிரச்னை எனப் பல்வேறு மோதல் போக்குகள் இருந்து வந்தன.

ஆனால், இப்போது தவெக ஆட்சியில் அந்த மோதல் போக்குகள் இல்லை" என்று தெரிவித்தார்.

summary

Congress Minister P. Viswanathan clarifies the stance on the Prime Ministerial candidate for the 2029 Lok Sabha elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments