FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவை அன்னூர் குளத்தில் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ; நச்சுப் புகையில் மூச்சுத் திணறும் மக்கள்!

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் தீ பற்றியதால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு மக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்பு...

26 செப்டம்பர் 2026, 4:44 pm IST
அன்னூர் குளத்தில் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ... - DIN
பகிர்:

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதனால் அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான குப்பைகள் திடீரென பற்றி எரிந்து மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட இந்த குப்பைக் கிடங்கில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இன்று அந்த குப்பைகளில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாக பரவியது.

Advertisement

Advertisement

குப்பைக் கிடங்கில் கடும் புகை மூட்டம்...

இதனால் குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள் எரிவதால் எழுந்த நச்சுப் புகை, சுற்றுவட்டாரம் முழுவதும் பரவி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த அன்னூர் தீயணைப்புப் படையினர் பல மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை மேட்டின் உள்ளேயும் தீ எரிவதால் அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தொடரும் அலட்சியம்!

அன்னூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், காய்கறிக் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் பேரூராட்சி நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அன்னூர் குளத்தில் பகுதியில் தொடர்ந்து கொட்டி வருகிறது.

இந்தச் சூழலில் அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்குத் தீ வைத்து கடுமையான புகைமூட்டத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதேபோல் மர்ம நபர் தீ வைத்ததால் மீண்டும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தத் தீ விபத்தால் அவதியுறும் பொதுமக்கள், “குப்பைக் கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இங்கு குப்பை கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என கடும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அலட்சியப் போக்கால் அன்னூர் குளமும் மாசுபட்டு, மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

summary

Massive fire at the garbage dump near Annur Lake, Coimbatore; residents choking on toxic smoke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments